சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
244   திருத்தணிகை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 118 - வாரியார் # 250 )  

உடலி னூடு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
     உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
     மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச்
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
     துரிய வாகு லாதீத ...... சிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
     தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
     வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி
மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
     மடையை மோதி யாறூடு ...... தடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
     கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
Easy Version:
உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு
மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு
உலவையூடு நீரூடு புவியினூடு
வாதாடும் ஒருவரோடு மேவாத
தனிஞானச் சுடரினூடு
நால்வேத முடியினூடும் ஊடாடு
துரிய ஆகுல அதீத சிவரூபம்
தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை
தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே
மடல் அறாத வாரீச அடவி சாடி
மாறான வரி வரால் குவால் சாய அமராடி
மதகு தாவி மீதோடி
உழவரால் அடாது ஓடி
மடையை மோதி யாறூடு தடமாக
கடல்புகா மகாமீனை முடுகி
வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு
மலர்வாவி
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர
கருணை மேருவே தேவர் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

உடலி னூடு போய்மீளும் உயிரி னூடு ... உடலுக்கு உள்ளும்,
உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும்,
மாயாத உணர்வினூடு வானூடு முதுதீயூடு ... அழியாத
உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும்,
உலவையூடு நீரூடு புவியினூடு ... காற்றினுள்ளும், நீரின் உள்ளும்,
மண்ணினுள்ளும்,
வாதாடும் ஒருவரோடு மேவாத ... சமயவாதம் புரிகின்ற
எவரிடத்திலும் காணக்கிடைக்காத
தனிஞானச் சுடரினூடு ... ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும்,
நால்வேத முடியினூடும் ஊடாடு ... நான்கு வேத உச்சியிலும்
ஊடாடுகின்றதும்,
துரிய ஆகுல அதீத சிவரூபம் ... துரிய நிலையில் இருப்பதும்,
துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை,
தொலைவிலாத பேராசை துரிசு அறாத வோர்பேதை ...
முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன்
தொடுமுபாயம் ஏதோசொல் அருள்வாயே ... அடைவதற்கு உரிய
வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி
அருள்வாயாக.
மடல் அறாத வாரீச அடவி சாடி ... இதழ்கள் நீங்காத தாமரைப்
பூவின்காட்டை அழித்து,
மாறான வரி வரால் குவால் சாய அமராடி ... தனக்குப் பகையான
வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து,
மதகு தாவி மீதோடி ... செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத்
தாண்டி மேலே ஓடி,
உழவரால் அடாது ஓடி ... வயலில் உழும் உழவர்கள் தன்னை
வருத்தாதபடி தப்பி ஓடி,
மடையை மோதி யாறூடு தடமாக ... வழியில் உள்ள நீர்
மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று,
கடல்புகா மகாமீனை முடுகி ... கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய
மீனை விரட்டித் தாக்கி,
வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு ... வாளை மீன் தான்
இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும்
மலர்வாவி ... (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர ... தெய்வமணம்
உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக்
காவலனே, வீரனே,
கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணையில் மேரு மலை
போன்றவனே, தேவர்களின் பெருமாளே.

Similar songs:

244 - உடலி னூடு (திருத்தணிகை)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

435 - புலையனான (திருவருணை)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

577 - கரிபுராரி காமாரி (விராலிமலை)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

637 - அலகின் மாறு (கதிர்காமம்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

694 - கடிய வேக (திருமயிலை)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

765 - இரதமான தேன் (சீகாழி)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

912 - திரு உரூப நேராக (வயலூர்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1043 - அகல நீளம் (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1044 - அடை படாது (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1045 - அமல வாயு (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1046 - அயிலின் வாளி (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1047 - இரதமான வாய் ஊறல் (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1048 - குருதி தோலினால் (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1049 - சுருதி ஊடு கேளாது (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1050 - தொட அடாது (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1051 - நிலவில் மாரன் (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1052 - மன கபாட (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1053 - அதல சேடனாராட (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

1054 - குருதி மூளை (பொதுப்பாடல்கள்)

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song